ADDED : பிப் 18, 2025 05:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: ராயப்பன்பட்டி எஸ்.ஐ., அருண் பாண்டி தலைமையிலான போலீஸ் குழு, சின்ன ஓவுலாபுரம் ரோட்டில் ரோந்து சென்ற போது, சாக்கு பையுடன் நடந்து சென்றவரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் 75 செ.மீ. நீளமுள்ள 2 வாள்கள் வைத்திருந்தார். போலீசார் விபரம் கேட்டதற்கு தன் மீது கொலை வழக்கு இருப்பதாகவும், சாட்சிகளை பலி வாங்க வாள் வைத்திருப்பதாக கன்னி சேர்வைபட்டி பிரகாஷ் பாண்டியன் 24, ராஜ்குமார் 26, தெரிவித்தனர்.
அதே போன்று நடந்து சென்ற மற்றொருவரை பிடித்து விசாரித்த போது, அவர் சின்ன ஒவுலாபுரத்தை சேர்ந்த பெருமாள் 26 என்பது தெரிந்தது.
அவரிடமிருந்து ஒரு வாள் பறிமுதல் செய்யப்பட்டது. மூவரும் கைது செய்து ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

