/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அரசு பஸ் மோதி ஐயப்ப பக்தர்கள் 3 பேர் காயம்
/
அரசு பஸ் மோதி ஐயப்ப பக்தர்கள் 3 பேர் காயம்
ADDED : டிச 18, 2024 07:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெரியகுளம்: தெலுங்கானா மாநிலம் அக்காய்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் 25. அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர்கள் கிருஷ்ணன் 25. சேகர் 26. ஆகிய மூவரும் தெலுங்கானாவில் இருந்து பாதயாத்திரையாக சபரிமலைக்கு சென்றனர்.
பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி முந்தைய வட்டார போக்குவரத்து கழகம் அருகே செல்லும் போது, பெரியகுளத்திலிருந்து தேனி நோக்கி சென்ற அரசு பஸ் சிவக்குமார் உட்பட மூவர் மீது பின்னால் மோதியது.
பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு மூவரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தென்கரை போலீசார் விபத்து ஏற்படுத்திய தேனியைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் தங்கப்பாண்டி 50. மீது வழக்கு பதிவு செய்தனர்.-