/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 4 பேர் கைது
/
விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 4 பேர் கைது
விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 4 பேர் கைது
விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் 4 பேர் கைது
ADDED : நவ 30, 2024 06:25 AM
கடமலைக்குண்டு; கடமலைக்குண்டில் ஆடுகளை கடித்த நாயை அடித்து தூக்கிலிட்டு கொன்ற 4 பேரை விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
கடமலைக்குண்டில் காய்கறி சந்தை நடைபெறும் இடத்தில் நவம்பர் 26ல் ஆடுகளை கடித்ததாக கூறி சிலர் தெரு நாயை கயிற்றால் கட்டி தூக்கிலிட்டு கொன்றனர். இச்சம்பவத்தை அங்கிருந்த சிலர் வீடியோவாக பதிவு செய்து வலைதளங்களில் பரப்பினர். நாயை பொது இடத்தில் அடித்து தூக்கிலிட்டு கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கால்நடை உதவி மருத்துவர் சதீஷ்குமார் கடமலைக்குண்டு போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து வீடியோவை ஆய்வு செய்த போலீசார் சம்பவத்தில் தொடர்புடைய மேலப்பட்டியைச் சேர்ந்த பூமிராஜ் 28, முருகன் 40, மலைச்சாமி 44, செல்வம் 42, ஆகிய 4 பேரையும் கைது செய்து அவர்கள் மீது விலங்குகள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.