ADDED : செப் 28, 2025 03:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆண்டிபட்டி: ஆண்டிப்பட்டி அருகே ரோசனப்பட்டியை சேர்ந்தவர் வேல்த்தாய் 36, க.விலக்கு அருகே உள்ள டைல்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். 15 நாட்களுக்கு முன் பீரோவின் முதல் லாக்கரில் 2 பவுன் செயின், மற்றொரு நான்கு பவுன் மாலை தங்க செயின், உள் லாக்கரில் இரண்டு பவுன் செயின் மோதிரம், கம்மல் ஆகியவற்றை வைத்து கதவை பூட்டி சாவியை வீட்டில் உள்ள ஒரு அறையில் வைத்திருந்தார்.
அவ்வப்போது பீரோவை திறந்து நகைகளை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் பீரோவை திறந்து நகைகளை சரிபார்த்ததில் 4 பவுன் மாலை செயின் மட்டும் காணவில்லை. பீரோவில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. காணாமல் போன 4 பவுன் செயின் குறித்து வேல்த்தாய் புகாரில் ராஜதானி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.