/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பம் பால் வியாபாரி கொலையில் 5 பேர் கைது
/
கம்பம் பால் வியாபாரி கொலையில் 5 பேர் கைது
ADDED : ஜூலை 20, 2025 05:09 AM
கம்பம்: கம்பத்தில் சில நாட்களுக்கு முன் பால் வியாபாரி இளம்பரிதி 27, அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பம் ஜல்லிகட்டு தெரு முருகன் மகன் இளம் பரிதி 27, இவருக்கு திருமணமாகி குழந்தை ஒன்று உள்ளது.
இவரும் இவரது தந்தையும் பால் வியாபாரம் செய்து வருகின்றனர். இளம்பரிதி ரேக்ளா ரேஸ்களில் ஆர்வம் உள்ளவர்.
ஜல்லிகட்டு காளைகள் வளர்த்து வருகிறார். இவரை போல இவரது தெருவிற்கு அருகில் வசிக்கும் சிலர் ரேக்ளா ரேசில் பல்கேற்பது வழக்கம். - போட்டிகளில் இளம்பரிதி தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.
இதனால் இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. வாக்குவாதம், அடிதடி நடந்துள்ளது. இதனால் சில நாட்களுக்கு முன் இளம்பரிதி கும்பல் ஒன்றால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்த ஈஸ்வரன் மகன் விஜய் 24, ராமன் மகன் தென்னவன் 23, கைது செய்யப்பட்டனர்.
தொடர் விசாரணையில் புதுப்பட்டியை சேர்ந்த டோப்பு பாலா 23, ஜனார்த்தனன் 21, கம்பம் உலகத் தேவர் தெரு ரவி தர்மா 28 ஆகிய மூவரை கைதுசெய்து இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையில் மேலும் சிலர் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர்களை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.