ADDED : ஜூலை 21, 2025 02:21 AM
தேனி: தேனி போலீஸ் சப் டிவிஷனில் சட்ட விரோதமாக மதுவிற்ற 3 பெண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி, அல்லிநகரம், வீரபாண்டி, பழனிசெட்டிபட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் சட்ட விரோத மதுவிற்பனை தொடர்பாக சோதனை நடத்தினர். கருவேல்நாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப்பில் மது விற்ற பாலமுருகன் 54, பழைய பஸ் ஸ்டாண்ட் காட்டு பத்ரகாளியம்மன் கோவில் அருகே மதுவிற்ற சொக்கத்தேவன்பட்டி வினோத்குமார் 25, புது பஸ் ஸ்டாண்ட் அருகே மதுவிற்ற தேனி ஆயில் மில் தெரு ராஜா 62, கோடங்கிபட்டி செல்லாயி அம்மன் கோயில் தெருவில் மது விற்ற அதே பகுதி ராசம்மாள் 55, போடேந்திரபுரம் டாஸ்மாக் அருகே காலை 10:00 மணிக்கு மதுவிற்ற அதே பகுதி சிவகாமி 37, வயல்பட்டி மந்தையம்மன் கோயில் தெருவில் வீட்டருகே மதுவிற்ற ராக்கம்மாள் 64 ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 121 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன.