/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள் மீது கார் மோதி 7 பேர் காயம்
/
பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள் மீது கார் மோதி 7 பேர் காயம்
பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள் மீது கார் மோதி 7 பேர் காயம்
பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள் மீது கார் மோதி 7 பேர் காயம்
ADDED : ஏப் 11, 2025 05:18 AM
கம்பம்: கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேசன் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்றவர்கள் மீது அதிவேகமாக வந்த கார் மோதி 7 பேர் காயமடைந்தனர்.
கம்பம் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் பஸ் ஏறுவதற்காக பயணிகள் நின்றிருந்தனர். அப்போது, வடக்கு பகுதியில் இருந்து தெற்கு நோக்கி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்த பயணிகள் மீது மோதியது. இதில் மார்க்கையன்கோட்டையை சேர்ந்த பாஸ்கரன் 62, காக்கில் சிக்கையன்பட்டியை சேர்ந்த ராணி 55, பழனிசெட்டிபட்டி சேர்ந்த போதுமணி 30, கரியணம்பட்டியை சேர்த்த ரஞ்சனி 58, போடியை சேர்ந்த பிரேம்குமார் 33, கம்பம் சென்றாயப் பெருமாள் 37 ஆகியோர் பலத்த காயமடைந்தனர். முன்னதாக அப்பகுதியில் இருந்த ஆட்டோ,டூவீலர்களில் மோதி சேதப்படுத்தியுள்ளது. காரை ஒட்டி வந்த கம்பம் உலகத் தேவர் இரண்டாவது தெருவை சேர்ந்த உதயகுமார் மகன் கிஷோர்குமார் 32 , கைது செய்யப்பட்டார். வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர். கம்பம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.