/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி 91.58 சதவீதம்: மாநில அளவில் 32 வது இடத்திற்கு தள்ளப்பட்டது
/
மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி 91.58 சதவீதம்: மாநில அளவில் 32 வது இடத்திற்கு தள்ளப்பட்டது
மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி 91.58 சதவீதம்: மாநில அளவில் 32 வது இடத்திற்கு தள்ளப்பட்டது
மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி 91.58 சதவீதம்: மாநில அளவில் 32 வது இடத்திற்கு தள்ளப்பட்டது
ADDED : மே 17, 2025 03:41 AM

தேனி: தேனி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 13,983 மாணவ, மாணவிகள் தேர்வு எழுயதில் 12,806 பேர் தேர்ச்சி பெற்று 91.58 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். கணிதப் பாடத்தில் 905 பேர் தோல்வியை தழுவியுள்ளனர். மாநில அளவில் தேனி மாவட்டம் 32வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 6879 மாணவர்கள், 7104 மாணவிகள் என 13,983 பேர் எழுதினர். இதில் 6130 மாணவர்கள், 6676 மாணவிகள் என 12,806 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 91.58 சதவீதமாகும்.
749 மாணவர்கள், 428 மாணவிகள் என 1177 பேர் தோல்வி அடைந்துள்ளனர். 2024ல் தேனி மாவட்டம்92.63 சதவீதம் பெற்று மாநில அளவில் 18 வது இடம் பெற்றிருந்த நிலையில், தற்போது 2025ல் 1.05 சதவீதம் குறைந்து மாநில அளவில் 32வது இடத்திற்கு பின் தள்ளப்பட்டது.
தேர்வு எழுதிய 146 பள்ளிகளில் 74 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
அதில் 29 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளன. ஆங்கிலப் பாடத்தில் கடந்தாண்டு 99.28 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தாண்டும் 99.38 சதவீதம் பெற்றுள்ளனர். சமூக அறிவியலில் 98.45 சதவீதமும், தமிழில் 98.41 சதவீதம் அறிவியலில் 98.38 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பின்னடைவு ஏன்
கணிதம் பாடத்தில் கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் குறைந்த நிலையில், இந்த ஆண்டும் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கவில்லை. தற்போது கணிதத்தில் 905 பேர் தோல்வி அடைந்துள்ளனர். இது 93.53 சதவீதமாகும். மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க உரிய நடவடிக்கை ஆரம்பத்தில் இருந்தே மேற்கொள்ளப்படும்.
மேலும் கணிதத் தேர்வில் அதிக மாணவர்கள் தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து கணித ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆலோசனை வழங்கப்பட்டு,மறுதேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி தெரிவித்தார்.

