/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த 940 சோலார் விளக்கு பொறிகள் தயார்
/
பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த 940 சோலார் விளக்கு பொறிகள் தயார்
பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த 940 சோலார் விளக்கு பொறிகள் தயார்
பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்த 940 சோலார் விளக்கு பொறிகள் தயார்
ADDED : பிப் 03, 2024 04:13 AM

தேனி : தோட்டகலைப்பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளில் 940 பேருக்கு சோலார் விளக்கு பொறிகள் வழங்கப்பட உள்ளது. இதனை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், கத்தரி, மிளகாய் உள்ளிட்ட தோட்டக்கலைப்பயிர்களில் சாறு உருஞ்சும் பூச்சிகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்க சோலார் விளக்கு பொறிகள் பயன்படுத்தலாம்.
இவை இப்பூச்சிகளை கட்டுப்படுத்தும். இப்பொறிகள் ஒரு ஏக்கருக்கு ஒன்று வீதம் அமைக்கலாம். இப்பொறியில் உள்ள மஞ்சள் விளக்குகள் சூரியன் மறைந்த பின்னர் 2 முதல் 3 மணி நேரம் வரை எரியும்.அப்போது வெளிச்சத்தில் கவரப்படும் சாறு உருஞ்சும் பூச்சிகள் இந்த விளக்கு பொறியில் உள்ள தண்ணீரில் விழுந்து இறந்து விடும். மேலும் இந்த பொறியினால் நன்மை தரும் பூச்சிகளுக்கு பாதிப்பு இருக்காது.
ஆண்டிப்பட்டி 121, போடி 122, சின்னமனுார் 118, கம்பம் 104, கடமலைகுண்டு 118, பெரியகுளம் 120, தேனி 119,உத்தமபாளையம் 118 என மொத்தம் 940 சோலார் விளக்குபொறிகள் விவசாயிகளுக்கு வழங்கப்படஉள்ளன.
இப்பொறிகள் பெறுவதற்கு விருப்பமுள்ள விவசாயிகள் அப்பகுதி தோட்டக்கலை உதவி அலுவலர்களை அணுகலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

