/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
'லிப்ட்' கேட்ட கல்லூரி மாணவரிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு
/
'லிப்ட்' கேட்ட கல்லூரி மாணவரிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு
'லிப்ட்' கேட்ட கல்லூரி மாணவரிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு
'லிப்ட்' கேட்ட கல்லூரி மாணவரிடம் 3 பவுன் தங்க செயின் பறிப்பு
ADDED : ஜன 25, 2024 05:52 AM
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் டூவீலரில் 'லிப்ட்' கேட்டு சென்றவர் கல்லூரி மாணவரின் ரூ.1.20 லட்சம் மதிப்பிலான தங்கச்செயின் பறித்து சென்றார்.
தேவதானப்பட்டி அருகே பொம்மிநாயக்கன்பட்டி வடக்கு காலனி சேர்ந்த ஸ்ரீகாந்த் மகன் ஹரிதாஸ் 19.
வீரபாண்டியில் தனியார் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். பொம்மிநாயக்கன்பட்டியில் இருந்து அ.வாடிப்பட்டி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். டூவீலரை மறித்து மருகால்பட்டி பிரிவு அருகே இறக்கி விடுமாறு 'லிப்ட்' கேட்டுளார். டூவீலரில் வந்தவர் ஹரிதாசை பின்னால் ஏற்றிக்கொண்டு மருகால்பட்டி பிரிவில் இறங்கிவிட்டார். அப்போது ஹரிதாசிடம் போன் செய்ய வேண்டும் என கூறி அலைபேசியை கேட்டுள்ளார். ஹரிதாசும் கொடுத்துள்ளார். நோட்டமிட்டு ஹரிதாசின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை, கண் இமைக்கும் நொடியில் பறித்துக் கொண்டு அலைபேசியுடன் சென்றுவிட்டார். ஜெயமங்கலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.