/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
துாய்மை பணியாளர் தீக்குளிக்க முயற்சி
/
துாய்மை பணியாளர் தீக்குளிக்க முயற்சி
ADDED : அக் 02, 2024 07:25 AM

தேனி : ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரம் போதுராஜா. இவர் ஆண்டிபட்டி பேரூராட்சியில் துாய்மை பணியாளராக தற்காலிகமாக பணிபுரிந்து வந்தார். ஒரு சுய உதவிக்குழு தலைவராகவும் இருந்தார்.
இந்நிலையில் இவரை பணயில் இருந்து நீக்கினர். மீண்டும் பணியில் சேர முயற்சித்துவருகிறார். இப் பிரச்னை தொடர்பாக நேற்று மதியம் தேனி ஊரக வளர்ச்சி முகமை திட்டவளாகத்தில் செயல்படும் மகளிர் திட்ட அலுவலகத்திற்கு வந்தார்.
சுய உதவிக்குழுவில் சேர்க்க கோரி அலுவலர்களுடன் பேசிக்கொண்டிருந்தவர், வேலை கிடைக்காத விரக்தியில் பையில் இருந்து கேனில் வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றினார். பெட்ரோல் கேனை பறித்த அலுவலர்கள் தேனி போலீசிற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போதுராஜாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.

