/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பயன்பாடு இன்றி சேதம் அடைந்த சமுதாயக்கூடம்
/
பயன்பாடு இன்றி சேதம் அடைந்த சமுதாயக்கூடம்
ADDED : நவ 25, 2024 07:04 AM

தேவாரம் : தேவாரம் பேரூராட்சி மூணாண்டிபட்டியில் பல லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டப்பட்டும் பயன்பாடு இன்றி உள்ளது.
இப்பகுதியில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். விவசாயம், கூலித் தொழிலாளர்களாக உள்ளனர்.
ஜெ. நகர் மெயின் ரோட்டில் பல லட்சம் மதிப்பில் சகல வசதிகளுடன் சமுதாயக்கூடம் கட்டப்பட்டது. கட்டி முடிக்கப்பட்டு ஆண்டுகள் பல ஆன பின்பும் மின் இணைப்பு வழங்கப்படாமல் பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது.
சமுதாய கூட உள் பகுதியில் பேன், தளவாடப் பொருட்கள் சேதம் அடைந்து உள்ளன. உரிய பராமரிப்பு இல்லாததால் பயன்பாடு இன்றி காட்சி பொருளாக உள்ளது. சமுதாய கூடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவாரம் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.