/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாட்டு வியாபாரி கொலை: நண்பர் போலீசில் சரண்
/
மாட்டு வியாபாரி கொலை: நண்பர் போலீசில் சரண்
ADDED : நவ 18, 2024 04:26 AM

கம்பம்: தேனிமாவட்டம் கம்பம் பாரதியார் நகர் முத்துக்குமார். அடிமாடுகளை வாங்கி கேரளாவில் இறைச்சிக்காக விற்பனை செய்யும் தொழில் செய்தார். இவரது லாரியை கம்பமெட்டு காலனியில் வசிக்கும், நண்பர் சதாம் உசேன் 32, ஓட்டி வருகிறார். இவரும் அடிமாடுகளை வாங்கி விற்கும் தொழில் செய்தார். இருவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்தது. போலீசார் சமாதானம் செய்து வைத்தும் தகராறு தொடர்ந்தது. நேற்றுமுன்தினம் முத்துக்குமார், சதாம் உசேனை தாக்கினார். அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் ஆத்திரமடைந்த சதாம் உசேன், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் கம்பம் குமுளி பைபாஸ் ரோட்டில் ஒர்க் ஷாப் ஒன்றில் படுத்திருந்த முத்துக்குமாரை, அரிவாளால் உடலில் பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த முத்துக்குமார் பலியானார். பின்னர் சதாம் உசேன், கம்பம் வடக்கு போலீசில் சரணடைந்தார். சம்பவம் நடந்த இடம் உத்தமபாளையம் போலீஸ் எல்லைக்குள் வருவதால் சதாம் உசேன் அப்போலீசாரிடம் ஒப்படைத்தனர்.