/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரோட்டில் நிறுத்திய மினி வேனில் ரூ.74 ஆயிரம் முகமூடி கொள்ளை
/
ரோட்டில் நிறுத்திய மினி வேனில் ரூ.74 ஆயிரம் முகமூடி கொள்ளை
ரோட்டில் நிறுத்திய மினி வேனில் ரூ.74 ஆயிரம் முகமூடி கொள்ளை
ரோட்டில் நிறுத்திய மினி வேனில் ரூ.74 ஆயிரம் முகமூடி கொள்ளை
ADDED : அக் 31, 2024 03:12 AM
தேனி: தேனி கோட்டூர் அருகே காய்கறி மினி வேனில் இருந்த பணம், அலைபேசியை மூன்று முகமூடி கொள்ளையர்கள் திருடி சென்றது குறித்து சின்னமனுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சின்னமனுார் ஓடைப்பட்டி நந்தவனத் தெரு நவீன்குமார் 23. பிக்கப் வேன் டிரைவர். இவர் அக்.28ல் வேனில் காய்கறிகளை ஏற்றிக் கொண்டு, ஒட்டன்சந்திரம் காய்கறி மொத்த மார்க்கெட்டில் இறக்கிவிட்டார். அதன் பின் வியாபாரிகளிடம் ரூ.73,700, 2 காசோலைகளை வாங்கி டிரைவர் சீட்டின் பின்புறம் உள்ள பையில் வைத்தார். ஒட்டன்சத்திரத்தில் கிளப்பி சின்னமனுார் வரும் வழியில் தேனி கோட்டூரை கடந்து சென்றார். அப்போது இயற்கை உபாதை கழிக்க இரவு 11:30 மணிக்கு ரோட்டின் வலதுபுறம் சீலையம்பட்டிக்கு அருகே சிறுகுளம் கண்மாய் அருகே மினிவேனை நிறுத்தி பார்க்கிங் செய்துவிட்டு சென்றார். சற்று நேரத்தில் அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் முகத்தில் துணியை போர்த்தி வேனின் அருகே வந்தனர்.டிரைவர் சத்தம் போடுவதற்குள், மூன்று முகமூடி நபர்களும், ரூ.73, 700 பணம், 2 காசோலைகள், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள அலைபேசியை திருடிவிட்டு தப்பி ஓடினர். வேன் டிரைவர் சின்னமனுார் போலீசில் புகார் அளித்தார். எஸ்.ஐ., சுல்தான்பாட்ஷா, வழக்குப்பதிந்து முகமுடி கொள்ளையர்கள் குறித்து விசாரிக்கிறார்.

