/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
இறந்தவர் உடலுடன் போலீசாரை கண்டித்து ரோடு மறியல் நடந்தது
/
இறந்தவர் உடலுடன் போலீசாரை கண்டித்து ரோடு மறியல் நடந்தது
இறந்தவர் உடலுடன் போலீசாரை கண்டித்து ரோடு மறியல் நடந்தது
இறந்தவர் உடலுடன் போலீசாரை கண்டித்து ரோடு மறியல் நடந்தது
ADDED : நவ 08, 2024 04:52 AM

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கார், டூவீலர் மோதிய விபத்தில் டூவீலரில் பின்னால் உட்கார்ந்து சென்றவர் பலியானார். போலீசார் கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்யாமல், டூவீலரை ஓட்டியவர் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்து இறந்தவர் உடலுடன் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
உத்தமபாளையம் அருகே கோம்பை அரண்மனைத்தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் 42. புதுக்கோட்டையில் மனைவியின் ஊரில் தீபாவளி கொண்டாடி விட்டு ,கோம்பைக்கு நவ.3ல் காரில் சென்று கொண்டிருந்தார். காரை ராஜ்குமார் ஓட்டினார். தேவதானப்பட்டி பைபாஸ் ரோடு பொம்மிநாயக்கன்பட்டி பிரிவு அருகே செல்லும் போது, புல்லக்காபட்டி காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆகாஷ் 23, டூவீலரை ஓட்ட அவரது நண்பர் சிவகுரு 23. பின்னால் உட்கார்ந்திருந்தார்.
பொம்மிநாயக்கன்பட்டி பிரிவு அருகே காரை முந்தி செல்லும் போது காரின் பின் பக்கம் இடித்ததில் டூவீலரில் சென்றவர்கள் விழுந்தனர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. தேவதானப்பட்டி எஸ்.ஐ., வேல்மணிகண்டன் டூவீலரை ஓட்டிச்சென்ற ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்தார். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சிவகுரு நேற்று இறந்தார்.
இந்நிலையில் போலீசார் முறையாக வழக்கு பதிவு செய்யாததை கண்டித்து ஆம்புலன்ஸில் இறந்தவர் உடலுடன் உறவினர்கள் மாலையில் தேனி- திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் ஒரு மணி நேரம் மறியலில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் அப்துல்லா விசாரணை செய்யப்படும் என கூறியதின் பேரில் கலைந்து சென்றனர்.--