/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
முட்புதர்களால் மழை நீரை தேக்க முடியாத சிறுகுளம்
/
முட்புதர்களால் மழை நீரை தேக்க முடியாத சிறுகுளம்
ADDED : செப் 27, 2025 04:43 AM

போடி: போடி அருகே சூலப்புரத்தில் அமைக்கப்பட்ட சிறு குளம் முட்புதர்களால் சூழ்ந்து உள்ளதால் மழை நீரை தேக்க முடியாமல் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
போடி ஒன்றியம், சிலமலை ஊராட்சிக்கு உட்பட்ட சூலப்புரத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். விவசாயம், ஆடு, மாடு மேய்த்தல் முக்கிய தொழிலாகும்.இப்பகுதியில் நீர் ஆதாரம் மேம்படும் வகையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் செலவில் வரத்து வாய்க்கால், படித்துறை சிறுகுளம் கட்டப்பட்டது. மழைக் காலங்களில் நீரைத் தேக்குவதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயத்திற்கு பயன்பட்டது.
தற்போது உரிய பராமரிப்பு இன்றி முட்புதர்களாக சூழ்ந்து உள்ளதால் மழைக் காலங்களில் குளத்தில் நீரைத் தேக்க முடியவில்லை.
சிறு குளத்தை சூழ்ந்துள்ள முட்புதர்களை அகற்றுவதோடு, மழை நீரை தேக்கும் வகையில் சீரமைத்திட போடி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.