/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
குடும்ப உறவுகளின் கூட்டணியில் விளைந்த மாடித்தோட்டம்
/
குடும்ப உறவுகளின் கூட்டணியில் விளைந்த மாடித்தோட்டம்
குடும்ப உறவுகளின் கூட்டணியில் விளைந்த மாடித்தோட்டம்
குடும்ப உறவுகளின் கூட்டணியில் விளைந்த மாடித்தோட்டம்
ADDED : ஆக 18, 2025 03:20 AM

பெரியகுளம் தென்கரை முதலியார் கோட்டை தெருவில் வீட்டின் மூன்றாவது மாடியில் ஒரு சென்ட் இடத்தில் இருபது ஆண்டுகளாக அரசு போக்குவரத்து பணிமனையின் மேலாளர் சுப்பிரமணியன். அவரது மனைவி ஆண்டாள். இத்தம்பதியின் மகன் ஜெயபிரகாஷ் ஆகியோரது கூட்டு முயற்சியால் செடிகள், பூக்கள், செழித்து வளர்ந்த மரங்கள் என, பச்சைப்போர்வை போர்த்தியவாறு திரும்பும் திசை எல்லாம் பசுமையாக உள்ளது. இந்த பசுமை மாடித்தோட்டத்திற்கு இத்தம்பதி 'பிருந்தாவனம்' என, பெயர்சூட்டி பராமரித்து வருவது கூடுதல் சிறப்பாக உள்ளது.
இயற்கை உரம் தயாரிப்பு ஆண்டாள் (இல்லத் தரசி) கூறுகையில், எங்கள் மாடி தோட்டத்தில் மருதாணி, கற்பூரவள்ளி, நந்தியாவட்டை, துணிச்சிபச்சிலை, அரளிப்பூ, சங்குப்பூ, செவன்த்டே ரோஸ், மாதுளை, எலுமிச்சை, சிவப்பு அரளி ரோஸ், கஸ்துாரி மஞ்சள், முருங்கை, ரோஜா பூ, கனாகாம் பரம், அரளி, செவ்வரளி, துாதுவளை, கற்றாழை, மாமரம் உள்ளிட்டவை வளர்க்கிறோம்.
தோட்டத்தில் விழுகின்ற இலைகள், காய்கறி கழிவுகள், ஆட்டு எரு, மாட்டு எரு, வாழைப் பழத்தோல், முட்டை ஓடுகள், முருங்கை இலைப்பொடி, சுண்டல், சோயாபீன்ஸ் போன்றவற்றை ஊறவைத்த நீர், புளித்த மோர் பயன்படுத்தி, இயற்கை உரமாக பயன்படுத்துவதால் பச்சையம் பாதுகாக்கப்பட்டு, இயற்கை முறையில் எங்களுக்கு தேவையான மூலிகைகள், காய்கறிகள் கிடைக்கின்றன.
இதனால் காலநிலை மாற்றத்திற்கான பூச்சி தாக்குதல் இன்றி, வீட்டின் சமையலுக்கு, சிறிய வீட்டு வைத்திய முறைகளுக்கு தேவையான மூலிகைகளும் ஆராக்கியமாகவே எங்களுக்கு கிடைக்கின்றன., என்றார்.
நண்பர்களுக்கு 'டிப்ஸ்' ஜெயபிரகாஷ், ஐ.டி. பணியாளர்: காலையில் எனது அம்மா ஆண்டாளுடன் இணைந்து மாடி தோட்டங்களை பராமரிப்பு பணி செய்வேன். அப்போது செடிகளுக்கும், பூ செடிகள், மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது மனது இலகுவாகவும், மகிழ்ச்சியாகவும் உணர முடிகிறது. மாதந்தோறும் சம்பளம் வாங்கியவுடன் புதுப்புது செடிகளை வாங்கி வந்து மாடித்தோட்டத்தில் பராமரிக்கிறேன். வீட்டு மாடி தோட்டத்தை அலைபேசியில் 'ஸ்டேட்டஸாக' வைப்பேன். 'மகிழ்வித்து மகிழ்' என்ற சொல்லாடலுக்கு ஏற்ப, மாடித்தோட்டம் அமைப்பது குறித்து எனது, கம்பெனியின் சக நண்பர்களிடத்தில் 'டிப்ஸ்' வழங்கியதால், 30 க்கும் மேற்பட்ட நண்பர்கள் அவர்களது வீடுகளின் மாடிகளில் சிறப்பாக மாடித்தோட்டம் அமைத்து பயனடைந்து வருகின்றனர்.
என்னை உற்சாகப்படுத்திக் கொள்ள மாடித்தோட்டத்தில் செடிகளின் நடுவே 20 நிமிடம் தியானம் செய்கிறேன். வேலைகளை உற்சாகத்துடன் செய்ய முடிகிறது. மேலதிகாரிகள் பாராட்டுகளை பெற முடிகிறது., என்றார்.-