/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஆவணி சுபமுகூர்த்தம் காய்கறி விலை உயர்வு
/
ஆவணி சுபமுகூர்த்தம் காய்கறி விலை உயர்வு
ADDED : ஆக 22, 2025 02:43 AM
பெரியகுளம்: ஆவணி மாதம் சுப முகூர்த்தம் என்பதால் மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகள் விலையும் உயர்ந்துள்ளது.
பெரியகுளம் தாலுகா பகுதியான மேல்மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம், சருத்துப்பட்டி, ஜல்லிபட்டி, சக்கரைப்பட்டி, சாவடிப்பட்டி மற்றும் 30 க்கும் அதிகமான உட்கடை பகுதிகளில் தக்காளி, கத்தரிக்காய், கொத்தவரங்காய், ரிங்பீன்ஸ், வெண்டைக்காய், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் பயிரிடுகின்றன. அறுவடை செய்யும் காய்கறிகள் பெரியகுளம், வத்தலக்குண்டு கமிஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது. கடந்த ஆடி மாதம் காய்கறிகள் விலை குறைந்திருந்த நிலையில், ஆவணி மாதம் நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, காதணி விழா, கிரகப்பிரவேசம் உட்பட சுபமுகூர்த்தம் அதிகம் என்பதால் காய்கறிகள் தேவைஅதிகரித்துள்ளது. இதனால் பெரியகுளம் மார்க்கெட்டில் கடந்த மாதம் ஒரு கிலோ கத்தரிக்காய் ரூ. 20க்கு விற்றது தற்போது ரூ.40 ஆகவும், ரூ.20 க்கு விற்ற வெண்டைக்காய் ரூ.40, ரூ.30க்கும் தக்காளி ரூ.50 ஆகவும், ரூ.70க்கு விற்ற பீன்ஸ் ரூ.100 ஆகவும் அனைத்து காய்கறிகள் விலையும் அதிகரித்துள்ளது.-

