/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தபால் நிலையங்களில் இன்று விபத்து காப்பீட்டு திட்ட முகாம் துவக்கம்
/
தபால் நிலையங்களில் இன்று விபத்து காப்பீட்டு திட்ட முகாம் துவக்கம்
தபால் நிலையங்களில் இன்று விபத்து காப்பீட்டு திட்ட முகாம் துவக்கம்
தபால் நிலையங்களில் இன்று விபத்து காப்பீட்டு திட்ட முகாம் துவக்கம்
ADDED : ஜூன் 14, 2025 05:51 AM
தேனி: தேனி கோட்ட தபால் நிலையங்களில் விபத்து காப்பீட்டுத் திட்டங்களில் பொது மக்கள் இணைவதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.'' என, தேனி கோட்ட தபால்துறை கண்காணிப்பாளர் குமரன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: தபால்துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டுக்கு ரூ.500 முதல் ரூ.700 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்யும் வசதி, தொலைபேசி மூலம் கணக்கில்லா மருத்துவ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளும் வசதியும்.
விபத்தினால் மரணம், நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் ஏற்பட்டவர்களின் குழந்தைகளின் கல்வி, திருமண செலவினங்களுக்காக காப்பீட்டு நிதி, விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ.1000 வீதம் 15 நாட்களுக்கு வழங்கப்படும்.
மேலும் 'சூப்பர் டாப் அப்' மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ.2 ஆயிரம் பிரீமியம் கட்டி ரூ.15 லட்சத்திற்கான கூடுதல் மருத்துவ காப்பீட்டையும் பெற்றுக் கொள்ளலாம்.
இதற்கான சிறப்பு முகாம்கள் ஜூன் 14 (இன்று) முதல் ஜூன் 30 வரை அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடக்கிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். விண்ணப்பப் படிவம், அடையாளச் சான்றிதழ் உள்ளிட்ட காகித பயன்பாடு இன்றி, 4 நிமிடத்தில் பயோ மெட்ரிக் சாதனத்தை பயன்படுத்தி காப்பீட்டுத் திட்டத்தை டிஜிட்டல் முறையில் பெற்றுக் கொள்ளலாம்.
கூடுதல் விபரங்கள் பெற தேனி இந்தியா போஸ்ட் மேமெண்ட் வங்கி கிளையை 04546 - 260501 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.