/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விபத்தை ஏற்படுத்தும் டிரைவிங் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை
/
விபத்தை ஏற்படுத்தும் டிரைவிங் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை
விபத்தை ஏற்படுத்தும் டிரைவிங் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை
விபத்தை ஏற்படுத்தும் டிரைவிங் டிரைவருக்கு எதிராக நடவடிக்கை
ADDED : பிப் 18, 2024 05:15 AM
மூணாறு: மூணாறில் சுற்றுலா பயணிகள் சென்ற ஜீப்பை விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஓட்டிச் சென்ற டிரைவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு மோட்டார் வாகன துறையினர் ஆலோசித்து வருகின்றனர்.
மூணாறுக்கு சில தினங்களுக்கு முன்பு சுற்றுலா வந்த பள்ளி மாணவ, மாணவிகள் மாட்டுபட்டிக்கு ஜீப்பில் சென்றனர். பள்ளிவாசல் எஸ்டேட் ஆற்றுக்காடு பவர் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்த டிரைவர் இசக்கிராஜா 25, ஜீப்பை ஓட்டினார்.
அவர் அதிக ஒலியுடன் பாட்டு வைத்ததுடன் கடும் வளைவு, பள்ளம் என ஆபத்தான ரோட்டில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் ஜீப்பை ஓட்டியுள்ளார். அதனை ஜீப்பை பின் தொடர்ந்து சென்ற சுற்றுலா பயணி அலைபேசியில் வீடியோ பதிவு செய்து இடுக்கி மோட்டார் வாகன துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார். அது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் ஷானவாஸ் தலைமையில் அதிகாரிகள் மூணாறில் விசாரணை நடத்தினர்.
இது போன்று ஜீப்பை ஓட்டிச் செல்வது இசக்கிராஜாவின் வழக்கம் என விசாரணையில் தெரியவந்தது. அதனால் அவரது லைசென்ஸ் ரத்து செய்வது உள்பட நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.