/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
டவுன் பஸ் நிறுத்தும் இடத்தை மாற்ற நடவடிக்கை தேவை
/
டவுன் பஸ் நிறுத்தும் இடத்தை மாற்ற நடவடிக்கை தேவை
ADDED : பிப் 17, 2024 05:50 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி வைகை அணை ரோட்டில் எம்.ஜி.ஆர்., சிலை அருகே டவுன் பஸ் நிறுத்தத்தை மாற்றி அமைக்க பேரூராட்சி நிர்வாகம், போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டிபட்டியில் இருந்து வைகை அணை வழியாக பெரியகுளம் செல்லும் டவுன் பஸ்கள் எம்.ஜி.ஆர்., சிலைக்குஅப்பால் அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடை அருகே நின்று செல்கிறது. இதனால் போக்குவரத்திற்கு இடையூறு இல்லை. ஆனால் பெரியகுளத்திலிருந்து வைகை அணை வழியாக ஆண்டிபட்டிக்கு வரும் டவுன் பஸ்கள் எம்.ஜி.ஆர்., சிலை அருகே நின்று செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. குறுகலான இடத்தில் ரோட்டில் ஓரங்களில் உள்ள கடைகளை போக்குவரத்திற்கு இடையூறாக நீட்டிப்பு செய்துள்ளனர். இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால் நெருக்கடி அதிகமாகிறது.
டவுன் பஸ்கள் நிற்கும்போது மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் செயல்படும் டவுன் பஸ் நிறுத்தத்தை 100 மீட்டர் தூரத்தில் உள்ள பாப்பம்மாள்புரம் அருகே இடம் மாற்றம் செய்ய போலீசார், பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.