/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கம்பமெட்டு ரோடு பிரிவில் கூடுதல் விளக்குகள் அமைப்பது அவசியம்
/
கம்பமெட்டு ரோடு பிரிவில் கூடுதல் விளக்குகள் அமைப்பது அவசியம்
கம்பமெட்டு ரோடு பிரிவில் கூடுதல் விளக்குகள் அமைப்பது அவசியம்
கம்பமெட்டு ரோடு பிரிவில் கூடுதல் விளக்குகள் அமைப்பது அவசியம்
ADDED : டிச 26, 2024 05:33 AM
கம்பம்: சபரிமலை செல்லும் வாகனங்கள் திருப்பி விடப்படும் கம்பமெட்டு ரோடு பிரியும் இடத்தில் கூடுதல் விளக்குகள் தற்காலிகமாக அமைக்க வேண்டும்.
சபரிமலை ஐயப்பன் கோயிலிற்கு வாகனங்கள் செல்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குமுளி ரோட்டில் வாகன நெரிசலை குறைக்க கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. அதன்படி கம்பம் பைபாஸ் ரோட்டில் சபரிமலை வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. பைபாஸ் ரோட்டில் செல்லும் வாகனங்கள், கம்பமெட்டு ரோடு பிரிவில், போலீசாரால் கம்பமெட்டு மலைப் பாதையில் திருப்பி விடப்படுகிறது.
அந்த இடத்தில் நான்கு ரோடுகள் சந்திப்பு உள்ளது. தேவையான எண்ணிக்கையில் போலீஸ் பாதுகாப்பு போட்டு, பணிகள் நடைபெறுகிறது.
பகலில் பிரச்னை இல்லை. இரவில் அந்த இடத்தில் போதிய விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் போலீசார் ரோட்டின் மையப் பகுதியில் நின்று திருப்பி விடும் பணியை மேற்கொள்வது சிரமமாக உள்ளது. இதற்கு காரணம் நான்கு திசைகளில் இருந்தும் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் வருகிறது. எனவே மையப்பகுதியில் போதிய வெளிச்சம் தரும் விளக்குகளை தற்காலிகமாக ஏற்படுத்த வேண்டும்.
கடந்தாண்டு அமைத்தது போல அந்த இடத்தில் பெரிய திரையில் டிஜிட்டல் போர்டு வைக்கலாம். கோயிலில்
இருந்து திரும்பி வரும் வாகனங்களை கூட பைபாஸ் ரோட்டில் அனுமதிக்காமல், கம்பம் நகர் வழியே செல்ல அறிவுறுத்தலாம்.
எனவே இரவு நேரங்களில் கம்பமெட்டு ரோடு பிரிவில் கூடுதல் கவனம் செலுத்த போலீசார் முன்வர வேண்டும்.