sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தேனி

/

வைகை அணை துார்வாரி கூடுதல் நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்: பழனிசாமிபேச்சு

/

வைகை அணை துார்வாரி கூடுதல் நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்: பழனிசாமிபேச்சு

வைகை அணை துார்வாரி கூடுதல் நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்: பழனிசாமிபேச்சு

வைகை அணை துார்வாரி கூடுதல் நீர் தேக்க நடவடிக்கை எடுக்கப்படும்: பழனிசாமிபேச்சு


UPDATED : செப் 05, 2025 04:42 AM

ADDED : செப் 05, 2025 01:46 AM

Google News

UPDATED : செப் 05, 2025 04:42 AM ADDED : செப் 05, 2025 01:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆண்டிபட்டி:'அ.தி.மு.க, ஆட்சிக்கு வந்தவுடன் வைகை அணையை துார்வாரி கூடுதல் நீர் தேக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்,' எனதேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதி கரிசல்பட்டி விலக்கில், 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பிரசார சுற்றுப்பயணத்தில் அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி பேசினார்.

அவர் பேசியதாவது: ஆண்டிபட்டி தொகுதியில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரும் போட்டியிட்டு முதல்வர்களை தேர்ந்தெடுத்த தொகுதி இது. ஏழைகள் பிரச்னைகளை தீர்க்கக்கூடிய அரசாக அ.தி.மு.க., அரசு இருந்தது. தி.மு.க., அரசுவிவசாயிகளுக்கு எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.

முல்லைப்பெரியாறு அணையில் 152 அடியாக உயர்த்த உச்சநீதிமன்ற உத்தரவை ஜெ, பெற்றார்.உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்து அணையைபலப்படுத்த ரூ.8 கோடி நிதி ஒதுக்கி முதற்கட்டமாக பேபி அணை, தடுப்புச்சுவர் பலப்பத்தும் பணி துவங்கின. ஆனால் மரங்களை அப்புறப்படுத்துவற்கு வழக்குப்பதிந்து கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.

இண்டி கூட்டணியில் அங்கம் வகிக்கும் முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வரிடம் பேசிஅணையின் நீர்மட்டத்தை உயர்த்தியிருக்கலாம். ஆனால் பேச்சுவார்ததையில் ஈடுபட வில்லை.

தேனி மாவட்ட மக்களுக்காக தி.மு.க.,போராட வில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஐந்து மாவட்ட மக்கள் பிரச்னையை கம்யூ, கட்சியிடம் பேசி நிறைவேற்றி இருக்கலாம்.நாட்டு மக்கள் குறித்து சிந்திப்பது கிடையாது. மீண்டும் அ.தி.மு.க., அரசு அமைந்த உடன் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசுடன் பேசி நிறைவேற்றுவோம்.

விவசாயிகளுக்கான மும்முனை மின்சாரம், நீரை சிக்கனமாக பயன்படுத்தக்கூடிய சொட்டு நீர் பாசனம் திட்டத்திற்கு அ.தி.மு.க., அரசு 75 சதவீதம் மானியம் கொடுத்தது. 50 சதவீத மானியம் டிராக்டருக்கு வழங்கப்பட்டது. விலையில்லா கறவைமாடுகள், ஆடு, கோழிகள் வழங்கப்பட்டன. இத் தொகுதியில் பருத்தி விளைந்ததும் தொழில்வளம் பெருகவில்லை.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படும். 20 கி.மீ., சுற்றளவில் உள்ளவர்கள் பயன்பெறும் வகையில் 2000 அம்மா மினி கிளினிக் ஏற்படுத்தினோம். அதனை தி.மு.க., அரசு தடை செய்து விட்டது. அ.தி.மு.க, ஆட்சி வந்தவுடன் 4000 மினிகிளினிக் கொண்டு வரப்படும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் தேனி மாவட்ட செயலாளர் முருக்கோடை ராமர், மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us