/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெற்பயிரை தாக்கும் புகையான் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
/
நெற்பயிரை தாக்கும் புகையான் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
நெற்பயிரை தாக்கும் புகையான் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
நெற்பயிரை தாக்கும் புகையான் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை
ADDED : செப் 21, 2024 06:13 AM
தேனி: தேனி வட்டாரத்தில் வீரபாண்டி, உப்பார்பட்டி, கோட்டூர், சீலையம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 800 எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பல இடங்களில் புகையான நோய் தாக்குதல் காணப்படுகிறது. அதாவது பழுப்பு தத்துப் பூச்சிகள் பயிரின் தண்டுகளில் அமர்ந்து சாறுகளை உறுஞ்சுகிறது. இதனால் பயிர்கள் காயந்து வட்ட வடிவில் தீய்ந்தது போல் காணப்படும்.
தேனி வேளாண உதவி இயக்குனர் சதீஷ் கூறுகையில், 'இந்த நோய்தாக்குதலை கட்டுப்படுத்த அதிக அளவில் தழைச்சத்து உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதனை 3,4 முறைகளாக பிரித்து வழங்க வேண்டும் விளக்கு பொறி, வைத்து தத்து பூச்சிகள், புகையானை அழிக்கலாம். தேவைக்கு அதிகமான நீரை வயலில் இருந்து வடித்து காயவிடவேண்டும். அதன்பின் நீர் பாய்ச்ச வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு அசாடிராக்டின் 400 மி.லி அல்லது அஸ்ட்டிமா பிரைடு 40 கிராம் அல்லது விபரிஷின் 300 மி.லி, அல்லது அசிடேட் 400 கிராம் அல்லது எத்திரல் மற்றும் பைமெட்ரோசின் சேர்ந்து 170 கிராம் தெளிக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்றினை மட்டும் தெளித்து புகையானைக் கட்டுப்படுத்தலாம் என்றார்.