/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி பற்றி விளக்க வேண்டும் ரேஷன் பணியாளர்களுக்கு அறிவுரை

ADDED : அக் 20, 2024 07:04 AM

தேனி : செறிவூட்டப்பட்ட அரிசி, அதன் பயன்கள் பற்றி பொதுமக்களுக்கு ரேஷன் பணியாளர்கள் விளக்க வேண்டும் என ரேஷன்கடை பணியாளர்கள் ஆய்வுக்கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேனியில் கூட்டுறவுத்துறை சார்பில் ரேஷன் கடை பணியாளர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கூட்டுறவுச்சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தலைமை வகித்தார்.
துணைப்பதிவாளர் சேகர் முன்னிலை வகித்தார்.
பொது வினியோகத்திட்ட கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், தேனி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் ரமேஷ், வட்ட வழங்கல் அலுவலர்கள், சார்பதிவாளர்கள், நுகர்பொருள் வாணிப கழக அலுவலர்கள், ரேஷன்கடை ஊழியர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.ரேஷன் கடைகளை குறிப்பிட்ட நேரத்தில் திறக்க வேண்டும். உரிமங்கள்,பதிவேடுகள், புகார் புத்தங்கள், விற்பனை முனைய கருவி முறையாக பராமரிக்க வேண்டும். கட்டுப்பாடற்ற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்தக்கூடாது. காலாவதியான பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. செறிவூட்டப்பட்ட அரிசி, அதில் உள்ள சத்துக்கள் பற்றி மக்களிடம் விளக்க வேண்டும். பருவமழை முன்னெச்சரிக்கையாக ரேஷன் பொருட்கள் நனையாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். தாழ்வான, சேதமடைந்த பகுதிகளில் உள்ள கடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற வேண்டும் என ரேஷன் கடை பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.