UPDATED : நவ 06, 2026 07:41 PM
ADDED : நவ 06, 2026 06:46 PM
தேனி: உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் ஆகம விதிப்படி நிர்ணயிக்கப்பட்ட கோயில்களை கண்டறிய அக்.,6ல் 5 நபர் குழு அமைக்கப்பட்டது.
குழுவினரால் பரிசீலிக்கப்பட்ட 34,971 கோயில் விவரங்கள் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை, ஆட்சேபனைகளை நவ., 25க்குள் தெரிவிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கருத்துக்களை நவ., 25 மாலை 5:45 மணிக்குள் துறை இணையதளம் அல்லது ‘தமிழ்நாடு ஹிந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம், 119, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை 34’ என்ற முகவரிக்கு தபால் மூலமாக அனுப்பலாம் என கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
