ADDED : ஜூலை 03, 2025 12:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: வேளாண் பொறியியல் துறை சார்பில் வேளாண் கருவிகள் பராமரிப்பு முகாம் தேனி சுக்குவாடன்பட்டி வேளாண் விற்பனைகுழு அலுவலக வளாகத்தில் நடந்தது. எம்.பி., தங்கதமிழ் செல்வன் முகாமை துவக்கி வைத்தார்.
முகாமில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்தல், தென்னை மட்டை துாளாக்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றை இயக்கி விளக்கமளிக்கப்பட்டது. எம்.எல்.ஏ., சரவணக்குமார், டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, கலெக்டர் நேர்முக உதவியாளர் (வேளாண்) வளர்மதி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.