/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு
/
விவசாயிகளுக்கு வேளாண் மாணவிகள் விழிப்புணர்வு
ADDED : ஏப் 25, 2025 07:02 AM
தேனி: கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வேளாண் கல்லுாரி மாணவிகள் கிராமங்களில் தங்கி விவசாயிகளுக்கு பூச்சி நோய் மேலாண்மை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
மதுரை வேளாண் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவி லலிதா ஸ்ரீ ஆண்டிபட்டி ஏத்தகோயில் பகுதியில் மிளகாய் பயிரை தாக்கும் புகையிலை வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்துதல், இனக்கவர்ச்சி பொறிகள் பயன்பாடு பற்றி விளக்கினார்.
குள்ளப்புரம் வேளாண் கல்லுாரி 4ம் ஆண்டு மாணவிகள் கொடுவிலார்பட்டியில் பூச்சி நோய் கட்டுப்படுத்துதல், இனக்கவர்ச்சி பொறிகள், தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும் பல்வேறு வகையான கரைசல்கள் தயாரிப்பது பற்றி விவசாயிகளுக்கு விளக்கினர். இந்நிகழ்ச்சியை மாணவிகள் முகில்ராணி, பவஸ்ரீ, எழில்நிலா, பிரசாந்தி, அபிஅருள் செல்வி, கண்மணி, சாலினி, திருமகள், அர்ச்சனா, மாரீஸ்வரி, கயல் ஜானகி, வேணுப்பிரியா செய்திருந்தனர்.

