/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விதை நெல் தேர்வுக்கு வேளாண் துறை ஆலோசனை எதிர்பார்ப்பு
/
விதை நெல் தேர்வுக்கு வேளாண் துறை ஆலோசனை எதிர்பார்ப்பு
விதை நெல் தேர்வுக்கு வேளாண் துறை ஆலோசனை எதிர்பார்ப்பு
விதை நெல் தேர்வுக்கு வேளாண் துறை ஆலோசனை எதிர்பார்ப்பு
ADDED : மே 15, 2025 05:11 AM
கம்பம்: விதை நெல் தேர்வு செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் ஆலோசனை வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
கம்பம் பள்ளத்தாக்கில் முல்லைப் பெரியாறு பாசனத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இரு போக சாகுபடியிலும் விதை நெல் விற்பனையை வேளாண் துறை மேற்கொள்கிறது. மானிய விலையில் விதை நெல் வழங்கப்படும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு விதை நெல்லுக்கு வேளாண் துறையை மட்டும் நம்பிக் கொண்டிருந்த விவசாயிகள், சில ஆண்டுகளாக விதை நெல் வாங்க தனியார் கடைகளையும் தேர்வு செய்கின்றனர்.
முதல் போகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆர்.என்.ஆர் என்ற ரகமே பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. இது தவிர 509 என்ற வீரிய ஒட்டு ரகமும் சரியாக இருக்கும். ஆனால் பெரும்பாலான விவசாயிகள் ஆர்.என். ஆர். ரகத்தையே தேர்வு செய்கின்றனர்.
கடந்தாண்டு இரண்டாம் போகத்தில் கம்பம் பகுதியில் சாகுபடி செய்ததில் ஆர்.என்.ஆர். ரகம் போதிய பலன் கிடைக்கவில்லை. இருந்த போதும் தற்போது முதல் போக சாகுபடிக்கு ஆர். என். ஆர். ரகத்தையே விவசாயிகள் தேர்வு செய்துள்ளனர்.
இதில் எந்த ரகம் சரியாக இருக்கும் என்று விவசாயிகளுக்கு வேளாண் துறை பரிந்துரை செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
அதே போல விதை சான்றளிப்பு துறை, தரக்கட்டுப்பாட்டு பிரிவினர் விற்கப்படும் விதை நெல் வகைகளின் முளைப்பு திறனை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.