/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நெல்லுக்கு பதில் மாற்று பயிர் சாகுபடி மானியம் வழங்க தயாராகும் வேளாண் துறை

ADDED : செப் 28, 2024 05:28 AM
கம்பம் : நெல் பயிறுக்கு பதிலாக மாற்று பயிர் சாகுபடியில் விவசாயிகளை ஈடுபடுத்த மானியங்களை வழங்க வேளாண் துறை தயாராகி வருகிறது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நெல் பயிர் பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. நெல் சாகுபடிக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். எனவே தண்ணீர் பயன்பாட்டை குறைக்கவும், மாற்று பயிர் சாகுபடிக்கு விவசாயிகளை திருப்ப வேளாண் துறை திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம் மண் வளம் பாதுகாக்கப்படும். பல வகை பயிர்கள் உற்பத்தி சமநிலைப்படும். குறிப்பாக தண்ணீர் தேவை அதிகம் தேவைப்படாத பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
வேளாண் துறையினர் கூறுகையில், நெல்லுக்கு பதில் உளுந்து, பாசிப்பயறு எண்ணெய்வித்து பயிர்கள் சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். நெல் தொடர்ந்து சாகுபடி செய்ய கூடாது. மாற்று பயிர் சாகுடிக்கு விதைகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. இடுபொருள்கள் சலுகை விலையில் தர உள்ளோம் என்றார்.
தண்ணீர் பிரச்னையை கையாளவும், நெல் கொள்முதலில் இருந்து தப்பிக்கவும் இந்த நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர் என்கின்றனர் விவசாயிகள்.