/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்
ADDED : பிப் 06, 2025 05:43 AM

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.
திம்மரசநாயக்கனூர், டி.பொம்மிநாயக்கன்பட்டி, டி.சுப்புலாபுரம் கிராமங்களில் முதல் கட்டமாக நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார்.
ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன், கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், நகர் செயலாளர் அருண்மதிகணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒவ்வொரு பூத்திலும், 9 பேர் கொண்ட குழு அமைத்து சட்டசபை தேர்தல் பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. அ.தி.மு.க., மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.