/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் விவசாயிகளுடன் கலந்துரையாடல்
/
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் விவசாயிகளுடன் கலந்துரையாடல்
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் விவசாயிகளுடன் கலந்துரையாடல்
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் விவசாயிகளுடன் கலந்துரையாடல்
ADDED : செப் 05, 2025 02:44 AM
தேனி: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி இன்று பழனிசெட்டிபட்டி ஓட்டலில் விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர்களிடம் கலந்துரையாடும் நிகழ்ச்சியில் பேசுகிறார்.
அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என சட்டசபை தொகுதிகள் வாரியாக சென்று பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்.
நேற்று மாலை ஆண்டிபட்டி தொகுதிக்கு வந்தார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர். அங்கு பிரசாரம் செய்து பழனிசெட்டியில் ஓட்டலில் தங்கினார்.
இன்று காலை10:00 மணிக்கு ஓட்டலில் விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோருடன் கலந்துரையாடலில் பங்கேற்கிறார்.
அதன்பின் மாலை 4:30 மணிக்கு கம்பம் திரையரங்கம் அருகே வாகனம் மூலம் பிரசாரம் செய்கிறார். போடி தேவர் சிலை சிக்னல் அருகே மாலை 6:30 மணிக்கும் பிரசாரம் செய்கிறார். இரவு 8:30 மணிக்கு தேனி பங்களாமேட்டில் பேசுகிறார்.
பிரசார ஏற்பாடுகளை தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமர், மேற்கு மாவட்டச் செயலாளர் ஜக்கையன் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்திருந்தனர்.