/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாக்காளர்களிடம் புகைப்படம் கேட்டு கட்டாயப்படுத்த கூடாது கலெக்டரிடம் அ.தி.மு.க.,வினர் வலியுறுத்தல்

ADDED : நவ 21, 2025 05:21 AM
தேனி: வாக்காளர் சிறப்பு திருத்த பணியின் போது வாக்காளர்களிடம் புகைப்படம் வழங்க கட்டாயப்படுத்த கூடாது என அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் ராமர் கலெக்டரிடம் வலியுறுத்தி உள்ளனர்.
மாவட்ட செயலாளர் கூறியதாவது: வாக்காளர் சிறப்பு திருத்த பணிக்காக படிவங்கள் வழங்கப் பட்டுள்ளன.
இந்த படிவத்துடன் ஆதார் நகல் உள்ளிட்ட எந்த ஆவணமும் வழங்க தேவையில்லை என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
ஆனால், பல இடங்களில் புதிய புகைப்படம் வழங்க பி.எல்.ஓ.,க்கள், சூப்பர்வைசர்கள் வாக்காளர்களிடம் அறிவுறுத்துகின்றனர். இது குறித்து ஆண்டிபட்டி தொகுதியில் நிர்வாகிகள் ஆய்வு செய்தோம். புகைப்படங்கள் ஒட்டாததால் வாக்காளர்கள் பலர் படிவங்களை திரும்பி வழங்காதது தெரிந்தது. புகைப்படம் ஒட்டி படிவத்தை திரும்ப வழங்க வேண்டும் என கட்டாயப்படுத்தக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங்கிடம் தெரிவித்துள்ளோம் என்றார்.