/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வாக்காளர் திருத்த பணியில் தி.மு.க.,வினர் ஈடுபடுவதாக அ.தி.மு.க., முற்றுகை

ADDED : நவ 06, 2025 07:11 AM

போடி: போடியில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் பி.எல்.ஓ.,க்கள் ஈடுபடாமல் தி.மு.க.,வினர் ஈடுபடுவதாக கூறி நகராட்சி அலுவலகத்தை அ.தி.மு.க., வினர் முற்றுகையிட்டனர்.
போடி தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் அச்சிடப்பட்ட படிவங்களை பி.எல்.ஓ., க்கள் வாக்காளர்கள் வீடு தேடி சென்று வழங்கி வருகின்றனர். இப் பணியில் போடி நகராட்சி 1,11,16 வது வார்டுகளில் பி.எல்.ஓ., க்கள் ஈடுபடாமல் தி.மு.க., வினர் ஈடுபடுவதாக கூறி அ.தி.மு.க., நகர செயலாளர் வாசு தலைமையில் அக்கட்சியினர் நகராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகை யிட்டனர்.
போடி நகராட்சி கமிஷனர் சுதா, டவுன் இன்ஸ்பெக்டர் கோபிநாத் பேச்சு வார்த்தை நடத்தினர். நகராட்சி கமிஷனர் அவர்களிடம் கூறுகையில்,'பி.எல்.ஓ., க்கள் தவிர மற்ற யாரும் வாக்காளர் தீவிர திருத்த பணியில் ஈடுபடவில்லை. நீங்கள் கூறுவது தவறான தகவல். பி.எல்.ஓ., க்கள் பணியில் ஈடுபடும் போது அங்கீகரிக்கப் பட்ட கட்சி நிர்வாகிகள் கண்காணிக்கலாம். பி.எல்.ஓ., க்கள் தவிர மற்ற நபர்கள் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார். அதன்பின் கலைந்து சென்றனர்.