/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நைஜீரியாவில் வான்வழி தாக்குதல் பொதுமக்கள் 10 பேர் உயிரிழப்பு
/
நைஜீரியாவில் வான்வழி தாக்குதல் பொதுமக்கள் 10 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் வான்வழி தாக்குதல் பொதுமக்கள் 10 பேர் உயிரிழப்பு
நைஜீரியாவில் வான்வழி தாக்குதல் பொதுமக்கள் 10 பேர் உயிரிழப்பு
ADDED : டிச 29, 2024 04:59 AM
டகார்: நைஜீரியாவில், பயங்கரவாதிகள் என நினைத்து விமானப்படையினர் நடத்திய தாக்குதலில், பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், பயங்கரவாத குழுக்கள் மற்றும் ராணுவத்துக்கு இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சொகுடா மாகாணம் சிலேமி பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பதுங்கி இருப்பதாக, ராணுவத்துக்கு சமீபத்தில் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, விமானப்படையினர் அந்த பகுதியில் வான்வழியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பொதுமக்கள் 10 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகள் என நினைத்து தவறுதலாக நடத்திய தாக்குதலால், 10 பேரும் இறந்ததாக நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சொகுடோ மாகாண அரசு கூறுகையில், 'பயங்கரவாதிகளை வெளியேற்றும் முயற்சியில் விமானப்படையினர், கிராமவாசிகள் மீது தவறுதலாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி விட்டனர்' என தெரிவித்துள்ளது.