UPDATED : அக் 31, 2026 07:11 PM
ADDED : அக் 31, 2026 07:07 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி பங்களாமேட்டில் ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் மாநில அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பொதுச்செயலாளர் பாண்டி தலைமை வகித்தார். பொருளாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். மாநில அரசு தொழிலாளர் கொள்கையை உடனடியாக அறிவித்தல், கட்டட உடலுழைப்பு தொழிலாளர் வாரியங்களுக்கு குழுக்கள் நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். தலைவர் திருப்பதி, துணை தலைவர் பெருமாள், மாநில துணை தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
