ADDED : மார் 16, 2024 06:25 AM

தேனி : தேனி சப் டிவிஷன் போலீஸ் சார்பில், லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலாக உள்ளதை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
டி.எஸ்.பி., பார்த்திபன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள் உதயக்குமார், செந்தில்குமார், கண்மணி, எஸ்.ஐ.,க்கள் பங்கேற்றனர். தி.மு.க., நகர செயலாளர் நாராயண பாண்டியன், தொண்டர்கள் உரிமை மீட்பு குழு செயலாளர் ரங்கநாதன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் அபுதாகீர், மார்க்சிஸ்ட் கம்யூ.,தாலுகா குழு செயலாளர் தர்மர் உள்பட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அரசியல் கட்சியினர் தேர்தலில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
தேர்தல் கமிஷன் நிர்ணயித்த இடங்களில் பொது கூட்டம், தெரு முனைப் பிரசாரங்கள் அனுமதிக்கப்பட்ட இடங்களில் நடத்திட வலியுறுத்தப்பட்டது. கட்சியினர் கூடுதல் இடங்களில் தெருமுனை பிரசாரத்திற்கு அனுமதி கோரினர்.
பின் தேர்தல் கமிஷன் அறிவித்த இடங்களில் மட்டுமே நடத்தப்படும் என டி.எஸ்.பி., தெரிவித்தார்.

