/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளி மாணவர்களை பண்ணைகளுக்கு அழைத்து செல்ல ரூ.5.56 லட்சம் ஒதுக்கீடு

ADDED : பிப் 16, 2024 06:19 AM
தேனி: மாவட்டத்தில் ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 500 மாணவர்களை தோட்டக்கலைத் துறை பண்ணைகளுக்கு பள்ளிக்கல்வி துறை சார்பில் அழைத்து செல்ல ரூ.5.56 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு தோட்டக்கலை பண்ணைகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களை அழைத்து சென்று விவசாயம் பற்றி எடுத்துரைத்தல், பண்ணை வேலைகள் உள்ளிட்ட வேளாண் அடிப்படை பணிகள் பற்றி விவரிக்கப்பட உள்ளது.
அழைத்து செல்லப்படும் மாணவர்களுக்கு சிற்றுண்டி, பழக்கன்றுகள் வழங்கப்பட உள்ளன.மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறைக்கு ஆண்டிப்பட்டியில் தென்னை, முருங்கை பண்ணைகள் உள்ளன. மாவட்டத்தில் இருந்து 500 மாணவர்களை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தேனி மாவட்டத்திற்கு ரூ.5.56 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டள்ளது. மாணவர்களை பண்ணைக்கு அழைத்து சென்றது போக மீதமுள்ள தொகையில் அரசுதொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மூலிகை, வீட்டுத்தோட்டம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.