/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
நீதிமன்றத்தில் அம்பேத்கர்பிறந்த நாள் விழா
/
நீதிமன்றத்தில் அம்பேத்கர்பிறந்த நாள் விழா
ADDED : ஏப் 10, 2025 06:28 AM

தேனி: தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அம்பேத்கரின் 134வது பிறந்த நாள் விழா நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் கோபிநாதன், அனுராதா, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன், சார்பு நீதிமன்ற நீதிபதி கீதா, மாவட்ட கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயபாரதி, தேனி தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணக்குமார், தேனி நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர்கள் கணேஷ், மகாராசன், செல்லப்பாண்டி, செல்வக்குமார், இளங்குமரன், சந்தானகிருஷ்ணன், முருகானந்தம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். வழக்கறிஞர் செந்தில் ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏப்ரல் 14 அரசு விடுமுறை நாள் என்பதால் முன்னதாக அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

