/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
26 கிலோ கஞ்சாவுடன் ஆந்திரா வியாபாரி கைது
/
26 கிலோ கஞ்சாவுடன் ஆந்திரா வியாபாரி கைது
ADDED : அக் 30, 2024 02:59 AM
கம்பம்,:தேனி மாவட்டம் கம்பம் போலீசார் ஆந்திரா சென்று மொத்த வியாபாரியை 26 கிலோ கஞ்சாவுடன் கைது செய்து அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.
கம்பத்தில் கம்பமெட்டு ரோட்டில் ஆக.,23ல் போலீசார் நடத்திய வாகன சோதனையின் போது 33 கிலோ கஞ்சாவுடன் அப்பகுதியைச் சேர்ந்த இளையேந்திரன் 44, சுரேஷ் 33, வனராஜ் 59, ஆகியோரை கைது செய்தனர்.
இவ்வழக்கில் இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர் ஆந்திராவை சேர்ந்த மொத்த வியாபாரி சோமி ரெட்டி லவராஜ் என்ற ஞானி என தெரிந்தது. இவரை கைது செய்ய கம்பம் வடக்கு இன்ஸ்பெக்டர் பார்த்திபன், எஸ்.ஐ.க்கள் இளையராஜா, கதிரேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இவர்கள் ஆந்திரா சென்று இரண்டு வாரங்கள் தங்கி ஞானியை 34, கைது செய்தனர்.
அவரிடமிருந்து 26 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். அம்மாநில நீதிமன்றத்தில் ஆஜர் செய்து பின் டிரான்சிட் வாரன்ட் பெற்று விசாரணைக்கு நேற்று கம்பம் அழைத்து வந்தனர்.