/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
வழியோர கிராமங்களை புறக்கணிக்கும் ஆண்டிபட்டி -- ஏத்தக்கோவில் டவுன் பஸ்
/
வழியோர கிராமங்களை புறக்கணிக்கும் ஆண்டிபட்டி -- ஏத்தக்கோவில் டவுன் பஸ்
வழியோர கிராமங்களை புறக்கணிக்கும் ஆண்டிபட்டி -- ஏத்தக்கோவில் டவுன் பஸ்
வழியோர கிராமங்களை புறக்கணிக்கும் ஆண்டிபட்டி -- ஏத்தக்கோவில் டவுன் பஸ்
ADDED : ஜூலை 19, 2025 12:39 AM
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் இருந்து ஏத்தக்கோவில் சென்று திரும்பும் டவுன் பஸ் வழியோரங்களில் உள்ள கிராமங்களுக்கு செல்வதை தவிர்ப்பதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஆண்டிபட்டியில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஏத்தக்கோவில் கிராமத்திற்கு தினமும் 15 முறை அரசு டவுன் பஸ் சென்று திரும்புகிறது. ஆண்டிபட்டி ரயில்வே சுரங்கப்பாலம் வழியாக மணியாரம்பட்டி, மணியக்காரன்பட்டி, மறவபட்டி விலக்கு, போடிதாசன்பட்டி, அனுப்பபட்டி, மேக்கிழார்பட்டி விலக்கு, போடிதாசன்பட்டி விலக்கு வழியாக ஏத்தக்கோவில் செல்கிறது.
மீண்டும் அதே வழியில் திரும்பி வர வேண்டும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் ஏத்தக்கோவிலில் இருந்து வரும் டவுன் பஸ் அனுப்பபட்டி, போடிதாசன்பட்டி, மணியாரம்பட்டி, மணியக்காரன்பட்டி கிராமங்களுக்கு செல்லாமல் மேக்கிழார்பட்டி விலக்கு, அனுப்பபட்டி விலக்கு வழியாக ஆண்டிபட்டி சென்று விடுகிறது.
இதனால் பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் பாதிப்படைகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது: பஸ் வரும் நேரத்தை கணக்கிட்டு கிராமங்களில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் பஸ் மாற்று வழியில் செல்வதால் கூடுதல் பணம் கொடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டி உள்ளது. நிர்ணிக்கப்பட்ட கிராமங்கள் வழியாக டவுன் பஸ் சென்று திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றனர்.