/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்குவரத்து நெருக்கடியால் திணறும் ஆண்டிபட்டி தொடர் நடவடிக்கை இன்றி கானல் நீராகும் பைபாஸ் ரோடு திட்டம்
/
போக்குவரத்து நெருக்கடியால் திணறும் ஆண்டிபட்டி தொடர் நடவடிக்கை இன்றி கானல் நீராகும் பைபாஸ் ரோடு திட்டம்
போக்குவரத்து நெருக்கடியால் திணறும் ஆண்டிபட்டி தொடர் நடவடிக்கை இன்றி கானல் நீராகும் பைபாஸ் ரோடு திட்டம்
போக்குவரத்து நெருக்கடியால் திணறும் ஆண்டிபட்டி தொடர் நடவடிக்கை இன்றி கானல் நீராகும் பைபாஸ் ரோடு திட்டம்
ADDED : ஜூலை 13, 2025 12:27 AM

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டியில் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தினமும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி திணறும் நிலையில் பைபாஸ் ரோடு திட்டம் கானல் நீராகிறது.
கொச்சி - -தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டிபட்டி நகர் பகுதி 2 கி.மீ., தூரத்தில் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.
100க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் புள்ளிமான்கோம்பை ரோடு, ஏத்தக்கோயில் ரோடு, பெரியகுளம் ரோடு, தெப்பம்பட்டி ரோடு ஆகியவை ஆண்டிப்பட்டி நகர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது. ஒரு நிமிடத்தில் 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகரை கடந்து செல்கின்றன. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே அளவு ரோட்டில் தற்போது தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கிறது. ரோட்டோர ஆக்கிரமிப்பு, போக்குவரத்து விதி மீறலால் ஆண்டிபட்டியை கடந்து செல்ல முடியாமல் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் அன்றாடம் திணறுகின்றனர். நகர்நகர் பகுதியில் ரோடு விரிவாக்கத்திற்கும், பைபாஸ் ரோடு அமைக்கவும் நடவடிக்கை இல்லை. ஆண்டிபட்டியில் நிலவும் போக்குவரத்து பிரச்னைகள் குறித்து பொது மக்கள் கூறியதாவது:
ரோட்டை பார்க்கிங் இடமாக்கியதால் நெருக்கடி
சாம்சன், சமூக நீதி மக்கள் இயக்க நிறுவனர் ஆண்டிபட்டி: ஆண்டிபட்டியில் நிரந்தர போக்குவரத்து போலீசார் இல்லை. பழைய காவல் நிலைய கட்டிடத்தை போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனுக்கு ஒதுக்கி உள்ளனர். போதிய எண்ணிக்கையில் போலீசார் இல்லை. ஆண்டிபட்டி நகர் பகுதியில் பல இடங்களில் ஒரே நேரத்தில் ஆறு வாகனங்கள் செல்லும் அளவில் அகலமான ரோட்டிற்கு இடம் உள்ளது.
ஆனால் பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. ரோட்டில் வாகனங்களை நிரந்தரமாக நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை இல்லை. இப் பகுதி திருமண மண்டபங்களில் பார்க்கிங் வசதி இல்லை.
முகூர்த்த நாட்களில் ரோடுகளை பார்க்கிங் இடமாக பயன்படுத்தி இடையூறு செய்கின்றனர். ரோட்டில் பட்டாசு வெடிப்பது, பிளக்ஸ் பேனரை தேசிய நெடுஞ்சாலையில் வைக்கின்றனர். நகரில் பட்டாசு வெடிக்க தடை விதித்து பேரூராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் அதை நடைமுறைப்படுத்தவில்லை.
டூரிஸ்ட் வேன்கள், கார்கள், டூவீலர்கள் போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் நிறுத்துகின்றனர். இவைகளுக்கு பார்க்கிங் வசதி ஆண்டிபட்டியில் இல்லை. காலை, மாலையில் முக்கிய இடங்களில் பள்ளி, கல்லூரி வாகனங்களை தொடர்ந்து நிறுத்துவதால் நெருக்கடி அதிகமாகிறது. இதனை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை இல்லை. உள்ளூர் வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. போலீசார் நடவடிக்கையில் அரசியல் தலையீடு அதிகமாவதால், நிரந்தர தீர்வு கிடைக்காமல் பலருக்கும் சிரமம் ஏற்படுகிறது.
சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்
ரத்தினம், முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முக சுந்தரபுரம்: ஆண்டிபட்டி நகர் பகுதியில் உள்ளூர் வாகனங்கள் அதிகம் உள்ளது.
பெரும்பாலான வாகனங்கள் 2 கி.மீ.,தூரம் உள்ள நகர் பகுதி ரோட்டில் நிறுத்தப்படுகிறது. கொண்டம்மநாயக்கன்பட்டியில் இருந்து ஆண்டிபட்டி தாலுகா அலுவலகம் வரை ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும். ரோட்டில் இருபுறமும் நடைபாதை அமைத்து ஆக்கிரமிப்புகளை எடுக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு உடனுக்குடன் அபராதம் விதிக்க வேண்டும்.
தெப்பம்பட்டி ரோடு சந்திப்பில் ரவுண்டானா அமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். விசேஷ நாட்களில் திருமண மண்டபங்களுக்கு வரும் வாகனங்களை ரோட்டில் நிறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். சாலையோர கடைகள் என்ற பெயரில் தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிக்கப்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் நடவடிக்கை ஆண்டிபட்டியில் இல்லை.