/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாவட்ட அலுவலர் மிரட்டுவதாக கூறி விஷம் குடித்த அங்கன்வாடி பணியாளர்; தேனி கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்தார்
/
மாவட்ட அலுவலர் மிரட்டுவதாக கூறி விஷம் குடித்த அங்கன்வாடி பணியாளர்; தேனி கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்தார்
மாவட்ட அலுவலர் மிரட்டுவதாக கூறி விஷம் குடித்த அங்கன்வாடி பணியாளர்; தேனி கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்தார்
மாவட்ட அலுவலர் மிரட்டுவதாக கூறி விஷம் குடித்த அங்கன்வாடி பணியாளர்; தேனி கலெக்டர் அலுவலகத்தில் மயங்கி விழுந்தார்
ADDED : ஏப் 22, 2025 07:03 AM

தேனி: 'வீட்டு வேலைக்கு வராததால் தேனி மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, தன்னை மிரட்டுவதாக கூறி' அங்கன்வாடி பணியாளர் ஜெயபாண்டி 40, பூச்சி மருந்தை குடித்து தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த போது மயங்கி விழுந்தார்.
தே னி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் தேனி ரத்னா நகர் அங்கன்வாடி பணியாளர் ஜெயபாண்டி பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார். அவர் கொண்டு வந்த மனுவில், 'ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி.
அவரது வீட்டிற்கு வீட்டு வேலை செய்ய அனுப்பினர். அவர் பணிமாறுதலில் சென்ற போது அவரது மகனை பார்த்துக்கொள்ள மறுத்தேன். மீண்டும் 2021ல் அவர் தேனியில் பணியில் சேர்ந்ததும் வீட்டு வேலைக்கு வர கூறினார். செல்ல மறுத்தேன்.
மாவட்ட அலுவலரை அலுவலகத்தில் ஒருவர் அரிவாளல் வெட்டினார். சிகிச்சையின் போது உடனிருந்து கவனித்துகொள்ள கூறினார். அப்போதும் செல்ல மறுத்தேன், இதனால் ஆத்திரமடைந்தார். என்மீது 2024 ஜூலையில் அல்லிநகரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் நான் தற்கொலை செய்தால் அதிகாரி பொறுப்பல்ல என ஸ்டேஷனில் எழுதி வாங்கினர்.
இந்நிலையில் பணியில் திருப்தி இல்லை என கூறி என்னை தேனியில் வேறு மையத்திற்கு மாற்றினார். அந்த மையத்திற்கு வாடகை, மின்கட்டணம் சொந்த செலவில் செய்கிறேன். அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கடந்த மாதம் எஸ்.பி., அலுவலகத்தில் என்மீது புகார் அளித்தார். இதனால் தினமும் வீட்டிற்கு போலீசார் வருகின்றனர். இதனால் மன உளைச்சலில் உள்ளோம். இதுபற்றி கேட்டால் அரசியல் செல்வாக்கு உள்ளதாக அலுவலர் மிரட்டுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருந்தது.
இதுபற்றி மாவட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி கூறுகையில், ' ஜெயபாண்டி தற்கொலை மிரட்டல் விடுத்து வந்ததால் போலீசில் புகார் அளித்தேன். எஸ்.பி., அலுவலகத்தில் ஏதும் புகார் அளிக்கவில்லை. எனது வீடு போடியில் உள்ளது. வீட்டில் வேலை செய்ய நான் அழைக்கவில்லை. அவர் சரியாக பணி செய்ய வில்லை என ஒரு முறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏப்.,17 முதல் பணிமாறுதலில் சென்று விட்டேன்,' என்றார்.