/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ரேஷன் அரிசி பதுக்கலில் மேலும் ஒருவர் கைது
/
ரேஷன் அரிசி பதுக்கலில் மேலும் ஒருவர் கைது
ADDED : மார் 22, 2025 04:42 AM
தேனி: தேனி அருகே 26 டன் ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இருவரை கைது செய்திருந்த நிலையில் கடத்தலில் மூளையாக செயல்பட்ட கம்பம் அஜ்மல் 45, என்பவரையும் கைது செய்தனர்.
தேனி அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள தனியார் குடோனில் 26 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. தாலுகா வழங்கல் பிரிவு அதிகாரிகள் புகாரில் உணவுப்பொருட்கள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்தனர். இந்த பதுக்கலில் ஈடுபட்ட அல்லிநகரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் ரவிக்குமார், பாண்டிதுரையை கைது செய்து விசாரித்தனர். ரேஷன் அரிசி பதுக்கலில் மூளையாக செயல்பட்ட கம்பம் பகுதியை சேர்ந்த அஜ்மலை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.