/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
/
கொள்ளை வழக்கில் மேலும் ஒருவர் கைது
ADDED : நவ 19, 2024 05:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பம்: ஆனைமலையன்பட்டி ராஜன் வீட்டில் 31 பவுன் தங்க நகைகள், வெள்ளி பொருள்கள், கார் கொள்ளையடிக்கப்பட்டது.
நவ . 6ல் வழக்கு பதிவு செய்த ராயப்பன்பட்டி எஸ்.ஐ. அருண்பாண்டி தலைமையிலான போலீசார் மயிலாடுதுறை தமிழ் செல்வன் 33, முசிறியை சேர்த்த விஜயகுமார், போடியை சேர்ந்த ஜெயக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் கொள்ளை சம்பவங்களில் முக்கிய பங்கு வகித்த குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த சந்திரன் 58, என்பவர் தலைமறைவாக இருந்தார்.
ராயப்பன்பட்டி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். சந்திரனை உத்தமபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்பட்டார்.

