/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
தாமரைக்குளம் கல்லுாரி விலக்கில் மூடப்பட்ட புறக்காவல் நிலையம் தலைதுாக்கும் சமூக விரோத செயல்

ADDED : டிச 01, 2024 06:50 AM

பெரியகுளம், : தாமரைக்குளம் கல்லூரி விலங்கு பகுதியில் பயணிகள் நிழற்குடையில் செயல்பட்டு வந்த புறக்காவல் நிலையம் மூடப்பட்டதால் மீண்டும் சமூக விரோத செயல்கள் தலைதூக்கியுள்ளது.
பெரியகுளம் தாமரைக்குளம் கல்லூரி விலக்கு பஸ்ஸ்டாப்பில் தினமும் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவிகள் கல்லூரிக்கு சென்று, திரும்புகின்றனர். வெளியூர்களில் வேலைக்கு பெண்கள் பஸ் ஸ்டாப்பில் நின்று செல்கின்றனர். இப் பகுதியில் சிலர் நின்று மாணவிகளை கிண்டல் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இப்பகுதியில் இரவில் மதுபாட்டில், கஞ்சா விற்பனை களை கட்டியுள்ளது.கடந்த வாரம் கல்லூரி முடிந்து ஊருக்கு செல்வதற்கு பஸ்சிற்காக காத்திருந்த மூன்று மாணவிகளை ஆட்டோவில் வந்து அவதூறாக பேசிய இருவர் கைது செய்யப்பட்டனர். இந்தப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கையால் இங்குள்ள பயணிகள் நிழற்குடையில் புறக்காவல் நிலையம் அமைத்தார். மூன்று போலீசார்கள் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டார். இதற்கு பொதுமக்கள் இடத்தில் வரவேற்பு இருந்தது. ரவுடியிஷம் குறைந்து. தற்போது எவ்வித முன் அறிவிப்பின்றி புறக்காவல் நிலையம் மூடப்பட்டது. இதனால் மீண்டும் அந்தப் பகுதியில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பெரியகுளம் தென்கரை போலீசார் மீண்டும் புறக்காவல் நிலையம் கண்காணிப்பு கேமராவுடன் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.-