/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பள்ளிகள் முன் படம் வரைந்து புகையிலை எதிர்ப்பு பிரசாரம்
/
பள்ளிகள் முன் படம் வரைந்து புகையிலை எதிர்ப்பு பிரசாரம்
பள்ளிகள் முன் படம் வரைந்து புகையிலை எதிர்ப்பு பிரசாரம்
பள்ளிகள் முன் படம் வரைந்து புகையிலை எதிர்ப்பு பிரசாரம்
ADDED : ஜூலை 17, 2025 11:53 PM

கம்பம்: பள்ளிகளை சுற்றி புகையிலை பொருட்கள் தடை செய்யப்பட்ட பகுதி என ரோட்டில் வரைந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர்.
பள்ளிகளுக்கு அருகில் பெட்டிக் கடைகளில் புகையிலை பொருள்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
உணவு பாதுகாப்பு துறையினர் மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தும் கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளது. இந்நிலையில் மாவட்ட சுகாதார அலுவலர் ஜவஹர்லால் , வட்டார மருத்துவ அலுவலர் முருகன் உத்தரவில் காமயகவுண்டன்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் முருகானந்தன், சித்தா டாக்டர் சிராசுதீன் தலைமையில் நாராயணத்தேவன் பட்டியில் உள்ள நேசன் கலாசாலை, ஆர்.சி. பள்ளி, ராமகிருஷ்ணா வித்யாலயா, அரசு கள்ளர் உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டனர். பள்ளிகளை சுற்றி 100 மீ சுற்றளவில் புகையிலை பொருள்கள் இல்லாத பகுதி என ரோட்டில் படம் வரைந்து மாணவர்களிடம் விளக்கினர். பெட்டிக்கடைக்காரர்களிடம் புகையிலை பொருட்கள் விற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பழனி குமாரசாமி , சுகாதார ஆய்வாளர்கள் பிரபுராஜா, அன்புநிதி, தினேஷ் உள்ளிட்ட கிராம சுகாதார நர்சுகள் இந்த பிரசாரத்தில் பங்கேற்றனர். பள்ளியின் ஆசிரிய ஆசிரியைகளும் விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்றனர்.