/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
விண்ணப்பம் வழங்கும் பணி இன்று துவக்கம்
/
விண்ணப்பம் வழங்கும் பணி இன்று துவக்கம்
ADDED : ஜூலை 08, 2025 02:02 AM
தேனி: தமிழகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் ஜூலை 15 முதல் நடக்க உள்ளது. மாவட்டத்தில் உள்ளாட்சி பகுதிகளில் 148 இடங்களில் முகாம் நடக்கிறது. இதில் அனைத்து அரசுத்துறைகள் சேவை கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த முகாமில் வழங்குவதற்கான மனுக்கள் விண்ணப்பங்களாக அச்சிடப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. அதனை எவ்வாறு பூர்த்தி செய்வது என அதற்காக நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் விளக்குவார்கள். விண்ணப்பங்கள் வீடுகள் தோறும் வினியோகிக்கும் பணி இன்று துவங்க உள்ளது. முகாமில் மனு அளித்தால் 45 நாட்களில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். மகளிர் உரிமைத்தொகை பெற விண்ணப்பங்கள் முகாம் நடைபெறும் நாளில் வழங்கப்படும் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.