/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
சாதனை மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா
/
சாதனை மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா
ADDED : நவ 23, 2024 06:23 AM

கூடலுார்; மாநில அளவில் பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு கூடலுார் என்.எஸ்.கே.பி. மேல்நிலைப் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது.
இப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் இன்பத்தமிழன் ஈரோடு மாவட்டத்தில் மாநில அளவில் நடந்த 200, 400, 600 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று 39 ஆண்டு சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார்.
மேலும் மாநிலஅளவில் சிறந்த விளையாட்டு வீரராக தேர்வு செய்யப்பட்டார். டிச., முதல் வாரத்தில் ஜார்கண்ட்மாநிலத்தில் நடைபெற உள்ள தேசிய தடகளப் போட்டியில் கலந்துகொள்ள தகுதிபெற்றுள்ளார்.
பிளஸ் 1 மாணவி யார்த்தினி 2023-20-24 கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 495 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் மூன்றாமிடம் பெற்றார். மேலும் பேச்சு, கட்டுரை, நடனம், சிலம்பம் உள்ளிட்ட இணைச் செயல்பாடுகளில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பெருமை சேர்த்து வருகிறார்.
பள்ளித் தலைவர் பொன்குமரன் தலைமையில், பொருளாளர் சிவாபகவத் முன்னிலையில் நடந்தது. தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் வரவேற்றார்.
சாதனை மாணவர்களுக்கு கேடயம், ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
மாணவருக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் கருத்தபாண்டியன், மாணவிக்கு பயிற்றுவித்த ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் ஆகியோர்களை பாராட்டி கவுரவித்தனர். ஆசிரியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.