ADDED : ஜூலை 14, 2025 02:45 AM

சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர் கோயில் திருப்பணி, கும்பாபிஷேகம் நடக்க உதவிய உபயதாரர்கள், நன்கொடை வழங்கியவர்களுக்கு கோயில் வளாகத்தில் திருப்பணியை முன்னின்று நடத்திய குழு சார்பில் பாராட்டு விழா நடந்தது.
இக்கோயில் திருப்பணி அனைத்து சமூக முக்கிய பிரமுகர்களால் செய்யப்பட்டது. கடந்த பிப்ரவரியில் கும்பாபிஷேகம் நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளராக துர்காவஜ்ரவேல், காயத்ரி பெண்கள் மெட்ரிக் பள்ளி தாளாளர் விரியன் சாமி ஆகியோர் பங்கேற்று, நடத்தினர். இந்நிலையில் திருப்பணி, கும்பாபிஷேக உபயதாரர்கள், நன்கொடை வழங்கியவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் காலை கோயில் வளாகத்தில் நடந்தது. தலைமை ஒருங்கிணைப்பாளர் துர்காவஜ்ரவேல் தலைமை வகித்தார். அறங்காவலர் தவமணி ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் நாகஜோதிபாலமுருகன் வரவேற்றார்.
திருப்பணிக்குழுவின் பொருளாளர் மலைச்சாமி, செயலாளர் சிவராமன், மலை ஆர்மி நிறுவனர் கொடியரன், கணக்கு வேலாயி அம்மாள் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி சூர்யவேல் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். உபயதாரர்களும், நன்கொடையாளர்களும் சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். பிரசாத பை அனைவருக்கும் வழங்கப்பட்டன. முன்னதாக சிவன், சிவகாமி அம்மன் முன்பாக வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன.
தலைமை ஒருங்கிணைப்பாளர், ''திருப்பணி, கும்பாபிஷேகம் நிறைவாக நடைபெற்றது. நன்கொடை வசூலில் மீதமுள்ள பணம் அறங்காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தற்போது நடந்து வரும் லெட்சுமி நாராயண பெருமாள் கோயில் திருப்பணிக்கு பயன்படுத்தப்படும்'' என்றார்.